tamilnadu

img

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு!

புதுதில்லி, ஜூலை 28- எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பையும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் குறைக்கவும் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்ச கம் சனியன்று (ஜூலை 27) வெளி யிட்ட அறிவிப்பில், எலெக்ட்ரிக் வாக னங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்படுவதாகவும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 18 விழுக்காட்டி லிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், எலெக்ட்ரிக் வாகனங் களை அரசு அதிகாரிகள் வாடகைக்குப் பயன்படுத்துவதற்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வரி விகிதங்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.  இக்கூட்டத்தின்போது, எலெக்ட்ரிக் வாகனங்கள், எலெக்ட்ரிக் வாக னங்களுக்கான சார்ஜர்கள், எலெக்ட் ரிக் வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு வரிச் சலுகைகளை வழங்கும்படி பரிந்துரைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரி விகிதங்களைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரவேற் பளித்துள்ளன.  எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கு வோருக்கு வருமான வரிச் சலுகை களும் வழங்கப்படும் என்று 2019 பட்ஜெட் உரையின்போது நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். கார்பன் தடத்தைக் குறைக்கவும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.  அதுமட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் இறக்குமதியால் மத்திய அரசுக்கு ஏற்படும் அதீத செலவு களையும் குறைக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. ஆகையால் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களிடையே ஊக்கப்படுத்த அரசு பல்வேறு முயற்சி களை எடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத் தேவையான சார்ஜிங் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து ள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மட்டுமல்லாமல் உற்பத்தி யையும் அரசு ஊக்கப்படுத்தி வரு கிறது.